அட்மின் வரவேற்புரை.

Post Reply
User avatar
admin
Site Admin
Posts: 267
Joined: Tue Nov 21, 2017 11:24 am

Thu Dec 07, 2017 5:34 pm

அட்மின் உங்களை அன்புடன் வரவேற்கிறார்.


பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களிலும் திரைப் படங்களிலும் அதீத அன்பும்

அக்கறையும் கொண்டஅன்பர்கள் அனைவரையும் இந்த இணையத்தின்

அட்மின் அன்புடன் வரவேற்கிறார்.

இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இயந்திரத்

தனமான, அவசர கதியான வாழ்க்கையில் சற்றே அவற்றின் இருந்து விடுபட்டு,பழைய

திரைப்படப் பாடல்களையும் திரைப் படங்களையும் நம் மனதில் இருத்திக் கொள்ளவும்

அவைகளின் மேன்மைகளை எண்ணி மகிழவும் அவைகளை பலரிடம் பகிர்ந்து கொண்டு

மகிழவும் நம்மில் பலருக்கு இயலாத வேலை ஆகிவிட்டது என்பது உங்கள்

அனைவருக்கும் தெரிந்த சங்கதி ! இதனால் பழைய தமிழ்த் திரைப்படப்

பாடல்களை விரும்பிக் கேட்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து

வருகிறது என்பது உண்மை.

இதனை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான்

இந்த இணயதளம் !இந்த இணையதளத்தின் நோக்கம் :


இதுவரை மேலே எழுதியிருப்பதை படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு

இந்த தளத்தின் நோக்கம் புரிந்திருக்குமே ! :)


1. பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள்- படங்களின் அருமை - பெருமைகளை

அனைவருக்கும் போய் சேர வேண்டும்.2. அரிய பாடல்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்.3. பழைய தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் சம்பந்த மாக

தவறுகள் ஏதாவது, எங்காவது , தென்பட்டால் அவைகளை

களைவதற்கு நாம் முயல வேண்டும் .4. பழைய திரைப் படப்பாடல்களின் - திரைப் படங்களின் உன்னத

பெருமைகளை நம் இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல

வேண்டும்.பழைய திரைப்படப் பாடல்கள் மற்றும் படங்கள் - இவைகளின்

கால வரையறை என்ன ?

எந்த காலத்துப் பாடல்களை பழைய பாடல்கள் என்பது குறித்து

மாறுபட்ட கருத்துக்கள் நம்மிடைய உண்டு !

சிலர் இளையராஜா அவர்களின் பாடல்களையே பழைய பாடல்கள்

என்று சொல்வதும் உண்டு !

அவர்களின் வரையறை அது !

நம் இளையதளத்தை பொருத்தவரை :1940 - 1980 வரை


வந்த படங்களின் பாடல்கள் பழையது ! :P( மெல்லிசை மன்னரின் பாடல்கள் இதற்கு விதிவிலக்கு ! )


மற்றபடி :


இந்த இணையதளத்தின் அட்மின் ஒரு மருத்துவன் ஆக

இருப்பதால்: மருத்துவ கட்டுரைகள் இந்த இணையதளத்தில்

இடம் பெறும்.


மற்றபடி :


மற்ற வளமையான அம்சங்களும் - இணையத்தின் முழுமைக்காக

இடம் பெறுகின்றன .


இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு வரும் அனைத்து

சகோதர, சகோதரிகள் அனைவரையும் தங்கள் கவலைகள்,

பிரச்சனைகள் போன்றவைகளை மறந்து பொழுபோக்குடு

அம்சங்கள் உள்ள இந்த இணையத்திற்கு வந்து மகிழ்ந்து

பயன்பட அன்புடன் மீண்டும் வரவேற்கிறோம் !

அன்பன்,Admin
" உள்ளங்கள் பலவிதம் , எண்ணங்கள் ஆயிரம் ,

உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம் !Image

Post Reply

Return to “அட்மின் வரவேற்புரை.”

  • Information
  • Who is online

    Users browsing this forum: No registered users and 1 guest