இந்த இணையத்தில் வந்து பதிவு செய்து
வந்திருக்கும் உறுப்பினர்களுக்க்கும், பதிவு செய்ய வந்திருக்கும்
உறுப்பினர்களுக்கும் - ஆக எல்லோரும் வந்து , கலந்து கொண்டு
சிறப்பான முறையில் தங்கள் நேரத்தை செலவிடும் எண்ணத்துடன்
நாங்கள் அமைத்திருந்தாலும், மிகச் சிறந்த முறையில் சில விதி முறை
களும், ஒழுங்கு முறைகளும் அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என்பது
மிக்க அவசியாகிவிடுகிறது .
இந்த விஷயத்தில் நாம் உறுதியாக உள்ளோம்.
அவைகள் :
1.இங்கே வரும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான
பகுதிகளை வெறுமனே படித்தும் , விருப்பமான பாடல்களை சேமித்து
வைத்துக் கொண்டும் இருக்காமல், அவர்கள் இந்த இணையத்தின் இழை
களில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை எழுதி இந்த இணையத்தை
சிறப்பிக்க விரும்புகிறோம் .
2. அதற்காக " கலந்து கொள்கிறேன் பேர்வழி " ( ! ) என்று என்று சொல்லி
தேவை இல்லாத பதிவுகளை எழுதிப் போட்டால் அவைகள் உடனுக்குடன்
நீக்கப்படும், இது உறுதி !
3.உறுப்பினர்கள் , தங்கள் படைப்புக்களை கண்ணியமாகவும் , மதிப்புகொடுக்கும்
வகையில் தர வேண்டும்.
4.உறுப்பினர்கள் , மத உணர்வுகளை புண்படும் வகையிலும், மற்ற
உறுப்பினர்களையும் , உறுப்பினர் அல்லாவர்களையும் இழித்தும் பழித்தும்
எழுதுவதும் , ஆபாச வசங்களை எழுதுவதும், ஆபாசப் ப்படங்களை தர
முயலுவதும் , ஜாதி - மத - தீவிரவாதம் பற்றி எழுதுவதும்.......................
கூடாது ! கூடாது ! கூடாதூ !
அப்படி உறுப்பினர்கள் எழுதினால் ?
விளக்கம் சிறுதும் இன்றி அவைகளை நீக்க அட்மினிக்கும்,
மற்ற நிர்வாகிகளுக்கும் உரிமை உண்டு.
5. இந்த இணையத்தில் அரசியல் பற்றி எழுதவும் , பேசவும் அனுமதி
இல்லை. அப்படி எழுதினால் நீக்கப்படும் .
தொடர்ந்து எழுதி வந்தால் விளக்கம் கூறாமல் உறுப்பினர்கள்
தடை செய்ய்யப்பட்டு நீக்காப்படுவார்கள் .
6.உறுப்பினர்களின் படைப்புக்களை திருத்தவோ, நீக்கவோ அட்மினுக்கு
உரிமை உண்டு. உறுப்பினர்கள் அவைகளைப் பற்றி எழுதவோ தடை உண்டு.
எனவே உறுப்பினர்கள் , தங்கள் படைப்புக்களை கண்ணியத்துடன் எழுத
வேண்டும். நீக்கப் பட்ட உறுப்பினார்கள் , குடும்பம் போன்று விளங்கும்
இந்த தளத்தில் வெளியே நின்று வருந்த நேரிடும், இந்த இணைய
தளத்தின் பல்வேறு சுவையான சந்திப்புக்களையும், பிரபங்களை
சந்திக்கும் நிகழ்ச்சிகளையும் இழக்க நேரிடும்.
அவர்கள் வேறு பெயர்களில் மறுபடியும் இங்கே வந்தாலும்
தங்களின் தனித்தமையை இழக்க நேரிடும் ,
அது மட்டுமல்ல .....
எங்களின் தொழில்
நுட்ப குழு அவர்களை அடையாளம் கண்டு நீக்கப்படுவார்கள்.
7. நாம் அன்றாடம் மன உழைச்சல் களில் இருந்து விலகி மகிழ்வுடன்
பொழுது போக்க இந்த தளம் பாடுபடும்,
நீங்களும் மகிழ்வுடன் இங்கே வந்து சுவைபட எழுதியும் பாடல்களை
கேட்டும் தங்களின் பொழுதைப் போக்க மீண்டும் வரவேற்கிறோம்.
Admin
விதி முறைகளும், ஒழுங்கு முறைகளும்.
-
- Information
-
Who is online
Users browsing this forum: No registered users and 1 guest